ஆப்நகரம்

நிரவ் மோடி பாணியில் ரூ.824 கோடி கடன் மோசடி செய்த சென்னை ‘கனிஷ்க்’ நிறுவனம்!

14 வங்கிகளை மோசடி செய்து, ரூ.824 கோடி கடன் மோசடியில் கனிஷ்க் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Samayam Tamil 21 Mar 2018, 12:13 pm
சென்னை: 14 வங்கிகளை மோசடி செய்து, ரூ.824 கோடி கடன் மோசடியில் கனிஷ்க் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
Samayam Tamil bhupesh kumar jain
பூபேஷ் குமார் ஜெயின்


சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் வெளிநாட்டு வங்கிகளை நிரவ் மோடி மோசடி செய்தது கண்டறியப்பட்டது. அதன்மூலம் ரூ.11,000 கோடி கடன் பாக்கி இருப்பதாக பிஎன்பி வங்கி தெரிவித்தது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சென்னையில் மற்றொரு மோசடி அரங்கேறியுள்ளது. வடக்கு உஸ்மான் சாலை பிரஷாந்த் டவர்ஸில் தங்க நகை தயாரிப்பு நிறுவனமான கனிஷ்க் அமைந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிண்டிகேட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆந்திர வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளை மோசடி செய்து ரூ. 824 கோடி கடன் பெற்றுள்ளார்.
இதுகுறித்து தெரியவந்ததை அடுத்து, சிபிஐ இயக்குநருக்கு 16 பக்கங்கள் கொண்ட கடிதத்தை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அனுப்பியுள்ளது. அதில் தங்க நகை இருப்பை அதிகமாக காட்டி, வங்கிகளிடம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

Chennai based firm Kanishk Gold Pvt. Limited has been declared as a fraud by bankers.

அடுத்த செய்தி

டிரெண்டிங்