ஆப்நகரம்

காய்கறி விலை: சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சென்னையில் இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய முழு விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...

Samayam Tamil 12 Oct 2020, 11:07 am
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே காய்கறி விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கிறது. ஒரு நாள் குறைந்தால் ஒரு நாள் உயர்கிறது. கடந்த சில நாட்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை பெரும் ஏற்றத்தைச் சந்தித்திருந்தது. சற்று ஆறுதலாக இன்று விலைச் சரிவு காணப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று (அக்டோபர் 12) 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 30 ரூபாயாக இருந்தது.
Samayam Tamil vegetables


அதேபோல வெங்காயம் விலை 20 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கத்தரிக்காய் விலை 10 ரூபாயாகவும், கேரட் விலை 50 ரூபாயாகவும், பீட்ரூட் விலை 25 ரூபாயாகவும் உள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.20
அவரைக்காய் - ரூ.15
பீன்ஸ் - ரூ.15
பீட்ரூட் - ரூ.25
பாகற்காய் - ரூ.20
கத்தரிக்காய் - ரூ.10
முட்டைகோஸ் - ரூ.18
குடை மிளகாய் - ரூ.25
கேரட் - ரூ.50
காளிபிளவர் - ரூ.25
சவுசவு - ரூ.10
தேங்காய் - ரூ.22
வெள்ளரிக்காய் - ரூ.4
முருங்கைக்காய் - ரூ.40
இஞ்சி - ரூ.50
பச்சை மிளகாய் - ரூ.35
கருணைக் கிழங்கு - ரூ.20
கோவைக்காய் - ரூ.18
வெண்டைக்காய் - ரூ.15
மாங்காய் - ரூ.50
நூக்கல் - ரூ.18
வெங்காயம் - ரூ.20
உருளைக் கிழங்கு - ரூ.30
முள்ளங்கி - ரூ.5
புடலங்காய் - ரூ.10
சுரைக்காய் - ரூ.10

அடுத்த செய்தி

டிரெண்டிங்