ஆப்நகரம்

சென்னையில் மீண்டும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி.. குவிந்த 2.88 பில்லியன் டாலர் முதலீடு!

சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் 2.88 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 18 Apr 2023, 6:09 pm
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை குறித்த ஆய்வறிக்கையை CBRE நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் 2.88 பில்லியன் டாலர் முதலீடுகள் குவிந்துள்ளன.
Samayam Tamil chennai
chennai


2018-22 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் 43.3 பில்லியன் டாலர் முதலீடு குவிந்துள்ளது. அதில் சென்னையில் 2.88 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது. சென்னையில் நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும் 0.9 பில்லியன் டாலர் முதலீடு குவிந்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் 16 பில்லியன் முதல் 17 பில்லியன் டாலர் வரை முதலீடுகள் குவியும் என எதிர்பார்ப்பதாகவும் CBRE நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழைய மற்றும் தற்போதைய ட்ரெண்டுகளை வைத்து பார்க்கும்போது அலுவலக இடத்துக்கான பிரிவில் ஏராளமான முதலீடுகள் குவியும் என எதிர்பார்ப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. இதுபோக டேட்டா செண்டர்களிலும் (Data centres) முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

2018ஆம் ஆண்டு முதல் வீடுகளுக்குதான் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 37% வீடுகளுக்கும், குடியிருப்புகளுக்குமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 900 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தியுள்ளன. இதில் 31% நிலம் டெல்லி - என்சிஆர் பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மும்பையில் 14% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த இடங்களில் பெங்களூருவில் 9% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹைதராபாத்தில் 7% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்