ஆப்நகரம்

Alibaba India: இந்தியாவை விட்டு வெளியேறிய அலிபாபா.. Paytm நிறுவனத்துக்கு விடுதலை?

சீன நிறுவனமான அலிபாபா இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 10 Feb 2023, 3:19 pm
சீனாவை சேர்ந்த மிகப்பெரிய மின்னணு வர்த்தக நிறுவனமான அலிபாபா (Alibaba) இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், பேடிஎம் (Paytm) நிறுவனத்தில் தனக்கு இருந்த 3.4% பங்குகளையும் அலிபாபா மொத்தமாக விற்பனை செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil alibaba
alibaba


இதன்படி, இந்தியாவில் இருந்து அலிபாபா நிறுவனம் மொத்தமாக வெளியேறுகிறது. இதுமட்டுமல்லாமல், பேடிஎம் நிறுவனத்தில் இனி அலிபாபாவுக்கு எந்த பங்கும் இல்லை. பேடிஎம் நிறுவனத்தில் அலிபாபா நிறுவனத்துக்கு மொத்தம் 6.26% பங்குகள் இருந்தன.

இதில் சுமார் 3.1% பங்குகளை ஏற்கெனவே ஜனவரி மாதத்தில் அலிபாபா நிறுவனம் விற்பனை செய்துவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது மீதமுள்ள பங்குகளையும் அலிபாபா நிறுவனம் மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இன்று பங்கு வர்த்தகத்தில் பேடிஎம் பங்கு விலை கடுமையாக சரிந்துள்ளது. இன்று பங்கு வர்த்தகத்தில் பேடிஎம் பங்கு விலை 9% சரிந்துள்ளது. கடந்த சில தினங்களாக பேடிஎம் பங்கு விலை தொடர்ந்து முன்னேறி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சரிந்துள்ளது.

இதற்கு முன் சொமேட்டோ (Zomato), பிக் பேஸ்கெட் (Big Basket) ஆகிய நிறுவனங்களில் இருந்த பங்குகளையும் அலிபாபா நிறுவனம் விற்பனை செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

பேடிஎம் நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் முதலீடுகள் இருந்ததால், ஏற்கெனவே பேடிஎம் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தது. இந்நிலையில், தற்போது பேடிஎம் நிறுவனத்தில் இருந்து அலிபாபா வெளியேறியுள்ளதால் இந்த விமர்சனத்தில் இருந்து பேடிஎம் நிறுவனத்துக்கு விடுதலை கிடைத்துள்ளது.

கடந்த சில தினங்களாகவே பேடிஎம் பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக பிப்ரவரி 6, 7 தேதிகளில் மட்டும் பேடிஎம் பங்கு 27% உயர்ந்திருந்தது. பேடிஎம் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு வருமானம் பாசிட்டிவாக இருந்ததால் சர்வதேச புரோக்கரேஜ் நிறுவனங்கள் பேடிஎம் பங்கிற்கான டார்கெட் விலையை உயர்த்தின.

டிசம்பர் காலாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் நஷ்டம் 392 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மேலும், டிசம்பர் காலாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 42% அதிகரித்து 2062.2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் Citi, Goldman Sachs, CLSA, Jefferies, Nomura போன்ற சர்வதேச புரோக்கரேஜ் நிறுவனங்கள் பேடிஎம் பங்கிற்கு BUY ரேட்டிங் கொடுத்துள்ளன.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்