ஆப்நகரம்

நிலக்கரி இறக்குமதியில் இந்தியா சறுக்கல்!

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 Mar 2021, 8:21 pm
டப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி குறித்த விவரங்களை எம்-ஜங்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய 11 மாதங்களில் இந்தியா மொத்தம் 196.3 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. இது 2019-20 நிதியாண்டின் இதே காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் அளவை விட 13.6 சதவீதம் குறைவாகும். அப்போது மொத்தம் 227.3 மில்லியன் டன் அளவு நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருந்தது.
Samayam Tamil coal


ஏப்ரல் - பிப்ரவரி மாதங்களில் கோக்கிங் நிலக்கரி அல்லாத இதர நிலக்கரி இறக்குமதி அளவு 157.59 மில்லியன் டன்னிலிருந்து 128.91 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. அதேபோல கோக்கிங் நிலக்கரி இறக்குமதி அளவு 45.17 மில்லியன் டன்னில் இருந்து 43.98 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 15.29 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. 2020 பிப்ரவரி மாதத்தில் இந்தியா மொத்தம் 22.68 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்திருந்தது.

வீடு கட்ட மானியம்: உடனே முந்துங்கள்... மார்ச் 31 கடைசி தேதி!

பிப்ரவரி மாதத்தில் கோக்கிங் நிலக்கரி அல்லாத இதர நிலக்கரி அளவு 16.94 மில்லியன் டன்னிலிருந்து 9.07 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. அதேபோல, கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 4.02 மில்லியன் டன்னிலிருந்து 4.82 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலக்கரியின் விலை அதிகமாக இருந்ததால்தான் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளதாக எம்-ஜங்சன் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிர்வாக இயக்குநருமான வினயா வர்மா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்