ஆப்நகரம்

தேங்காய் பருப்பு ஏலம்.. ஈரோடு விவசாயிகள் மகிழ்ச்சி!

அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் 6 லட்சத்து 2 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 30 Jul 2022, 12:40 pm
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 172 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 81 ரூபாய் 27 காசுக்கும், அதிகபட்ச விலையாக 84 ரூபாய் 9 காசுக்கும், சராசரி விலையாக 83 ரூபாய் 89 காசுக்கும் விற்பனையானது.
Samayam Tamil தேங்காய் பருப்பு


அதேபோல, இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 10 காசுக்கும், அதிகபட்ச விலையாக 77 ரூபாய் 69 காசுக்கும், சராசரி விலையாக 73 ரூபாய் 5 காசுக்கு ஏலம் போனது. மொத்தமாக 7,596 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு 6 லட்சத்து 2 ஆயிரத்து 788 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 293 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 82 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 84 ரூபாய் 67 காசுக்கும், சராசரி விலையாக 84 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

தேங்காய் பருப்பு ஏலம்: ரூ.11 லட்சம் வருமானம்!
அதேபோல, இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 92 காசுக்கும், அதிகபட்ச விலையாக 78 ரூபாய் 69 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 65 காசுக்கு ஏலம் போனது. மொத்தமாக 14,278 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு 11 லட்சத்து 37 ஆயிரத்து 957 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்