ஆப்நகரம்

காபியால் இரட்டிப்பு லாபம் கிடைக்குமா? அட இதை வாங்கி இருந்தால் கிடைத்திருக்கும்!

கடந்த மூன்று ஆண்டுகளில் பங்குதாரர்களுக்கு இரட்டிப்பு லாபம் கொடுத்த காபி டே பங்கு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 18 May 2023, 5:57 pm
பிரபல காபி நிறுவனமான காபி டே (Coffee Day) பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்கி லாபம் கொடுத்துள்ளது.
Samayam Tamil coffee day
coffee day


காபி டே நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டு சர்வதேச அளவில் காபி ஸ்டோர்களை திறக்கும் அளவுக்கு வளர்ந்த நிறுவனம். காபி டே பங்கு அண்மையில் ஏற்றம் அடைந்துள்ளதால், கடந்த சில தினங்களாக முதலீட்டாளர்களை காபி டே பங்கு வெகுவாக கவர்ந்துள்ளது.

காபி டே பங்கு அதன் உச்சங்களில் இருந்து சரிந்துவிட்டது. தற்போதும் காபி டே பங்கு விலை குறைவாகத்தான் இருக்கிறது. உதாரணமாக இன்று காபி டே பங்கு விலை 36.45 ரூபாயாக மட்டுமே உள்ளது. எனினும், கடந்த சில ஆண்டுகளில் காபி டே பங்கு தனது முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திலேயே காபி டே பங்கு விலை 13 சதவீதம் உயர்ந்துள்ளது. சுமார் ஒரு மாத காலமாக காபி டே பங்கு ஏறுமுகத்துக்கான அறிகுறிகளை காட்டி வருகிறது. இதனால் காபி டே பங்கை முதலீட்டாளர்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் பங்கு சந்தை சரிந்தபோது ஜூன் மாதத்தில் காபி டே பங்கு விலை வெறும் 15 ரூபாய் அளவில் இருந்தது. அப்போது காபி டே பங்கை வாங்கியவர்களுக்கு தற்போது 100 சதவீதம் மேல் லாபம் கிடைத்து பணம் இரட்டிப்பாகி இருக்கும்.

காபி டே நிறுவனம் காபி ஸ்டோர்களை நடத்துவது மட்டுமல்லாமல் காபி கொட்டைகள் வர்த்தகம் செய்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் ரிசார்டுகளையும் நடத்தி வருகிறது.

டிசம்பர் காலாண்டில் காபி டே நிறுவனத்தின் வருவாய் 244 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆனால், 402 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது ஒரு முக்கிய பாதகமாகவே உள்ளது.

தற்போது காபி டே நிறுவனத்தின் பங்குகளில் 86 சதவீத பங்குகள் சிறு முதலீட்டாளர்களிடமே இருக்கின்றன. காபி டே புரமோட்டர்களிடம் வெறும் 10 சதவீத பங்குகள் மட்டுமே இருக்கின்றன.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்