ஆப்நகரம்

கொரோனாவால் நஷ்டம்... வேலை போகும் பயத்தில் ஊழியர்கள்!

காக்னிசண்ட் நிறுவனத்துக்கு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 29 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Jul 2020, 2:53 pm
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே பணியிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஐடி நிறுவனங்கள் பல வருவாய் ஈட்டமுடியாமல் தவிப்பதோடு, செலவுகளைக் குறைக்கும் வகையில் ஊதியத்தை உயர்த்தாமலும், புதிய வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்காமலும் இருந்து வருகின்றன. ஏற்கெனவே பணியில் இருக்கும் திறனற்ற ஊழியர்கள் நீக்கப்பட்டும் வருகின்றனர். இதுபோன்ற சூழலில்தான் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்தது. கொரோனா ஊரடங்கால் வருவாய் இழப்பும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டது.
Samayam Tamil cognizant


ஐடி துறை முழுவதுமே அடிவாங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு நிறுவனமாக தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும், ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தும் இழப்புகளை ஈடுசெய்து வருகின்றன. ஐடி துறையில் ஆதிக்கம் செலுத்தும் காக்னிசண்ட் நிறுவனம் தனது நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தது. கொரோனா பாதிப்பு நீடிக்கும் பட்சத்தில் உலகளவில் காக்னிசண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 13,000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி பிரயன் ஹம்ப்ரீஸ் கூறியிருந்தார். வருவாய் இழப்பால் வேறு வழியில்லாமல்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டது.

பொறுமையை சோதிக்கும் ஏர் இந்தியா: கடுப்பில் ஊழியர்கள்!

ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை காக்னிசண்ட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 29 சதவீத வீழ்ச்சியுடன் 361 மில்லியன் டாலர் மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் கூட 509 மில்லியன் டாலர் லாபம் கிடைத்தது. வருவாயைப் பொறுத்தவரையில் 3.4 சதவீத வீழ்ச்சியுடன் 4 பில்லியன் டாலர் கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பால்தான் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக காக்னிசண்ட் நிறுவனம் கூறியுள்ளது. வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்நிறுவனம் தனது பணியாளர்களை மேலும் வேலையை விட்டு நீக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிறுவனத்தின் லாபம் குறைந்திருப்பது அதன் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்