ஆப்நகரம்

ஊழியர்களை விரட்டியடிக்கும் காக்னிசண்ட்... கடுப்பில் ஊழியர்கள்!

காக்னிசாண்ட் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

Samayam Tamil 4 Jul 2020, 1:14 pm
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கும் காக்னிசண்ட் அலுவலகங்களில் ஊழியர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. எனினும், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐடி ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
Samayam Tamil காக்னிசண்ட் சென்னை அலுவலகம்


இதனால் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள காக்னிசாண்ட் அலுவலகங்களில் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுதாக அனைத்திந்திய ஐடி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வினோத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொழிலாளர் துறைக்கும், இதர அரசு அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், சுமார் 18,000 ஊழியர்கள் பிராஜக்ட் இல்லாமல் இருப்பதால் அவர்களில் பலர் பாதிக்கப்படக்கூடும் எனவும் அனைத்திந்திய ஐடி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கத்தின் செயலாளர் சுராஜ் நிதியாங்கா பேசுகையில், “பெங்களூருவில் காக்னிசாண்ட் ஊழியர்களிடமிருந்து எங்களுக்கு சுமார் 20 புகார்கள் வந்துள்ளன. தமிழ்நாடு சங்கத்திற்கு 20 புகார்கள் வந்துள்ளன. காக்னிசாண்ட் ஏராளமான ஊழியர்களை வெளியேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

உலகளவில் காக்னிசாண்ட் நிறுவனத்தை சேர்ந்த சுமார் 13,000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிரயன் ஹம்ப்ரீஸ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். காக்னிசாண்டுக்கு உலகளவில் 2.9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களில் 70 விழுக்காட்டினர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்