ஆப்நகரம்

கோயம்புத்தூர் ஜவுளி ஆலைக்கு கோடிகளில் நஷ்டம்!

கொரோனா பாதிப்பால் லட்சுமி மில்ஸ் நிறுவனத்துக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Aug 2020, 9:49 pm
லட்சுமி மில்ஸ் நிறுவனம் கோயம்புத்தூரில் உள்ள மிகப்பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனமாகும். ஜி.குப்புசாமி நாயுடுவால் 1910ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு பல்லடம், அவிநாசி சாலை, கோவில்பட்டி ஆகிய இடங்களில் ஆலைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். லட்சுமி மில்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி செயல்முறைகள் உலகளாவிய தரத்திற்கு இணையானவை.
Samayam Tamil lakshmi mills


இந்நிறுவனத்துக்கு தற்போது கொரோனா ஊரடங்கால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் ரூ.5 கோடி லாடம் கிடைத்திருந்த நிலையில் இந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கால் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆடை உற்பத்தியில் ஆர்டர்கள் குறைந்து போனதால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல் சாகுபடியில் சாதனை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. உற்பத்தி முற்றிலும் முடங்கியது. புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பாததால் உற்பத்தி முழு வீச்சில் நடைபெறவில்லை. திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

லட்சுமி மில்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.8 கோடியாக மட்டுமே இருந்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.54 கோடி வருவாய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்