ஆப்நகரம்

TNSTC தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு அறிவிப்பு!

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Jun 2022, 12:21 pm
சாதாரண பயண கட்டண பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil collection batta for drivers of ordinary tnstc buses doubled tn govt announcement
TNSTC தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு அறிவிப்பு!



பெண்களுக்கு இலவசம்!

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான சிறப்புச் சலுகை ஒன்றை வெளியிட்டிருந்தார். சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பயன்பெற்று வருகின்றனர்.

வருமானம் குறைவு!

தமிழக அரசின் இத்திட்டம் பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் வருவாய் ரீதியில் அரசுக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் இத்திட்டத்தால் சாதாரண கட்டண பேருந்துகளில் டிக்கெட் வசூல் குறைந்துள்ளது. இதன் விளைவாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்கப்படும் வசூல்படியும் குறைந்துள்ளது.

முக்கிய கூட்டம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தத்திற்கான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை மே 12ஆம் தேதி நடைபெற்றது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் கே.கோபால் முன்னிலை வகித்தார்.

ஊழியர்கள் கோரிக்கை!

இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்குப் பேட்டாவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசு அறிவிப்பு!

மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிட்., சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதித்ததைத் தொடர்ந்து ஓட்டுநர், நடத்துனர்கள் பெற்று வந்த வசூல்படி குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்