ஆப்நகரம்

Bank Holidays: பிப்ரவரி மாதம் எத்தனை நாள் வங்கி விடுமுறை?

பிப்ரவரி மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை வருகிறது என்று இங்கே பார்க்கலாம்...

Samayam Tamil 31 Jan 2022, 10:47 am
வங்கிகள் நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான இடமாகும். வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகளின் விடுமுறை நாள், வேலை நேரம் போன்றவற்றை முன்கூட்டியே தெரிந்து வைப்பது நல்லது. இதனால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் நாம் தவிர்க்கலாம். எனவே, வருகிற பிப்ரவரி மாதத்தில் வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்துகொள்வோம்...
Samayam Tamil bank leave


பிப்ரவரி மாதத்தில் குறிப்பிடும்படியாக பெரிய பண்டிகைகள் எதுவும் இல்லாததால் விடுமுறை நாட்கள் குறைவுதான். சில மாநிலங்களில் மட்டும் உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அந்தப் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

பிப்ரவரி 6, 13, 20, 27 ஆகிய தினங்களில் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கம்போல வங்கிகள் இயங்காது. அதேபோல, பிப்ரவரி 12, 26 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

பிப்ரவரி 2 - சோனம் சோச்சார் (காங்டாக்)

பிப்ரவரி 5 - சரஸ்வதி பூஜை

பிப்ரவரி 15 - முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள், லூயி நாகைனி ( இம்பால், கான்பூர், லக்னோ)

பிப்ரவரி 16 - குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகர்)

பிப்ரவரி 19 - சத்ரபதி சிவாஜி ஜெயந்தி (பிலாபூர், மும்பை, நாக்பூர்).

அடுத்த செய்தி

டிரெண்டிங்