ஆப்நகரம்

Bank Holidays: ஜூலை மாதம் எத்தனை நாள் வங்கி விடுமுறை?

எந்த நாட்களில் இயங்காது தெரியுமா?

Samayam Tamil 30 Jun 2021, 2:42 pm
வருகிற ஜூலை மாதத்தில் எத்தனை நாள் வங்கிகள் இயங்கும், எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை போன்ற விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.
Samayam Tamil complete list of bank holidays in tamil nadu and across india for july 2021 month
Bank Holidays: ஜூலை மாதம் எத்தனை நாள் வங்கி விடுமுறை?


வங்கிகள்!

நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் இடமாக வங்கிகள் உள்ளன. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் நம் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம்முடைய பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம். எனவே வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.

சனி - ஞாயிறு விடுமுறை!

வங்கிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் மொத்தம் 6 விடுமுறை வருகிறது. ஜூலை 6, 13, 20, 27 ஆகிய நான்கு நாட்களும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்று வங்கிகள் இயங்காது. அதேபோல, ஜூலை 12 இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், ஜூலை 26 நான்காவது சனிக்கிழமை என்பதாலும் அன்றும் வங்கிகள் செயல்படாது.

மற்ற விடுமுறைகள்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை. ஜூலை 12ஆம் தேதி ரத யாத்திரையை முன்னீட்டு புவனேஷ்வரில் உள்ள வங்கிகள் இயங்காது. அதேபோல, ஜூலை 12ஆம் தேதி இம்பாலில் ரத ஜாத்ராவை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பானு ஜெயந்தியை முன்னிட்டு சிக்கிம் மாநிலத்தில் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் வங்கிகள் இயங்காது. ஜூலை 16ஆம் தேதி உத்தராகண்டில் ஹரேலா பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17ஆம் தேதி அகர்தாலா மற்றும் சிம்லாவில் உள்ளூர் விடுமுறை. அதேபோல, ஜூலை 19ஆம் தேதி சிம்லாவில் உள்ள வங்கிகள் இயங்காது. கெர் பூஜாவை முன்னிட்டு அகர்தாலாவில் ஜூலை 31ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்