ஆப்நகரம்

கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்.. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறுமா?

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் செய்தனர்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 10 Mar 2023, 3:46 pm
கடந்த 11.02.2023 அன்று சென்னையில் நடைபெற்ற சிபிஎஸ் ஒழிப்பு கோரிக்கை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் படி, நேற்று (09.03.2023) வியாழக்கிழமை தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கோரி கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடைபெற்றது. மதிய உணவு இடைவேளையில் கீழ்கண்ட இடங்களில் நடைபெற்றது.
Samayam Tamil OPS


மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பெ.குமார் தலைமையில் கன்னங்குறிச்சியிலும்,
சேலம் மாவட்டம் ESI மருத்துவமனையில் சேலம் மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்க முன்னணி வெ.ரமேஷ் தலைமையிலும், ஏத்தாப்பூர், கெங்கவல்லி, தலைவாசல், ஆத்தூர் துணை இயக்குநர் அலுவலகம் ஆகிய இடங்களில் சேலம் மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், சேலம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவருமான இராமாயி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கல்வித் துறை ஊழியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறை ஊழியர்கள், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையிலும் அரசு ஊழியர்களில் தங்களுடைய கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் கருப்பு துணி கட்டி போராட்டம் செய்தனர்.

பழைய பென்சன் திட்டம்: வாழ்க்கையே இருளாகிவிட்டது.. ஒளி தருவாரா தமிழக முதல்வர்?

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வ்ருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டம், நடை பயண போராட்டம், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் என இவர்கள் நடத்தாத போராட்டமே இல்லை.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது ஆட்சிக்கு வந்ததும் நிதிச் சுமையைக் காரணம் காட்டி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தத் தயங்குவதாக சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்