ஆப்நகரம்

ஈரானிடம் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு

ஈரானிடம் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி, ஏப்ரல் மாதத்தில் 57 சதவீதம் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 57 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இறக்குமதி 45 சதவீதம் குறைந்துள்ளது.

Samayam Tamil 7 May 2019, 7:48 pm
ஈரானிடம் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி, ஏப்ரல் மாதத்தில் 57 சதவீதம் குறைந்துள்ளது.
Samayam Tamil oil-5_0.


ஈரானிடம் இருந்து சீனாவுக்கு அடுத்து அதிக அளவில் இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை காரணமாக, 6 மாதங்களுக்கு மட்டும் எண்ணெய் வாங்க அனுமதி அளிக்கப்பட்டது.

நடப்பு மாதத்தில் இருந்து அந்த சலுகையை அமெரிக்கா நீட்டிக்காமல் ரத்து செய்ததால், ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நாளொன்றுக்கு 2 லட்சத்து 77 ஆயிரம் பேரல்கள் வீதம் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.

இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 57 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இறக்குமதி 45 சதவீதம் குறைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்