ஆப்நகரம்

பிளிப்கார்ட் வசூலிக்கும் புதிய கூடுதல் கட்டணம்.. கொந்தளித்த வாடிக்கையாளர்கள்!

பிளிப்கார்ட் நிறுவனம் புதிதாக விற்பனை கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பதால் வாடிக்கையாளர்கள் கண்டனம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 11 May 2023, 2:06 pm
பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து விற்பனை கட்டணம் (Sale fee) என்ற பெயரில் 10 ரூபாய் வசூலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil flipkart
flipkart



பிளிப்கார்ட் நிறுவனம் தனது இணையதளத்தில் அவ்வப்போது சிறப்பு விற்பனை நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதில் தள்ளுபடி விலை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பிளிப்கார்ட் நிறுவனம் 500 ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களை டெலிவரி கட்டணம் இல்லாமல் இலவசமாகவே டெலிவரி செய்கிறது.

இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் புதிதாக 10 ரூபாய் விற்பனை கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. எந்தவொரு காரணமும் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் வீணாக பணத்தை வசூலிக்கவே இந்த விற்பனை கட்டணத்தை பிளிப்கார்ட் வசூலிக்க தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

மறுபுறம், வாங்கும் பொருளுக்கு தள்ளுபடி வழங்குவதாக கூறிவிட்டு விற்பனை கட்டணம் என்ற பெயரில் தேவை இல்லாத கட்டணத்தை பிளிப்கார்ட் வசூலிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் குறை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பிளிப்கார்ட் நிறுவனம் விற்பனை கட்டணம் என்ற புதிய கட்டணத்தை தாமாகவே உருவாக்கி இருப்பதாகவும் ஒருவர் விமர்சித்துள்ளார். இதுபோல பலரும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 10 ரூபாய் விற்பனை கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு பிளிப்கார்ட் அளித்துள்ள பதில்களில், விற்பனை நிகழ்வுகளில் வாங்கும் முதல் பொருளுக்கு மட்டும் குறைந்த கட்டணமாக விற்பனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும், பல தரப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டுவருவதற்கு இந்த விற்பனை கட்டணம் உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.


எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்