ஆப்நகரம்

இனி வங்கிக்கே போக வேண்டாம்... வீடியோலயே எல்லாம்!

வீடியோ மூலமாக அக்கவுண்ட் ஓப்பன் செய்யும் வசதியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொண்டுவந்துள்ளது.

Samayam Tamil 24 Apr 2021, 5:01 pm
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதுவும் கொரோனா வந்த பிறகு பாதுகாப்பு அம்சங்களில் முக்கியக் கவனம் செலுத்தப்படுகிறது. வங்கிச் சேவைகளை முடிந்தவரை வங்கிக் கிளைகளுக்கு வராமல் ஆன்லைன் மூலமாகவே பெறும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொண்டுவந்துள்ளது. அதன் ஒரு படியாக, புதிதாக வங்கிக் கணக்கு திறக்கும்போது வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறை (KYC) எளிதாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sbi


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் யோனோ ஆப் மூலமாக வங்கிக் கணக்கு திறக்கும்போது KYC முறை வீடியோ மூலமாக முடிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பம் மூலமாக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலமாக, வாடிக்கையாளர்கள் வங்கிக்கே வராமலேயே, எந்தவித காகிதத்தையும் பூர்த்திசெய்யாமலேயே வங்கிக் கணக்கு திறக்க முடியும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யோனோ ஆப் மூலமாக வங்கிக் கணக்கு திறப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

>> டவுன்லோடு YONO ஆப்

>> New to SBI என்பதை கிளிக் செய்யவும்.

>> அடுத்து ‘Insta Plus Savings Account' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

>> ஆதார் விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.

>> ஆதார் சரிபார்ப்பு முறையை முடித்து, தனிநபர் விவரங்களைப் பதிவுசெய்யவும்.

>> வீடியோ கால் அழைப்பை ஷெட்யூல் செய்து KYC முடிக்கவும்.

>> KYC சரிபார்ப்புக்குப் பிறகு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்