ஆப்நகரம்

சிலிண்டர் டெலிவரி.. இனி எல்லாமே கிடைக்கும்!

நீங்க கடைக்கே போகவேண்டியதில்லை!

Samayam Tamil 24 Feb 2022, 11:46 am
இந்தியன் ஆயில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. இனி சிலிண்டருடன் வேறு சில பொருட்களும் உங்களுடைய வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யப்படும்.
Samayam Tamil dabur fmcg goods will be delivered at home with lpg cylinders
சிலிண்டர் டெலிவரி.. இனி எல்லாமே கிடைக்கும்!


சிலிண்டர் டெலிவரி!

வீட்டில் இருந்து புக்கிங் செய்தாலே சமையல் சிலிண்டர்கள் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யப்படுகிறது. இது இல்லத்தரசிகளுக்கு எளிதாக உள்ளது. இதில் இன்னொரு மகிழ்ச்சி செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது. சிலிண்டர் மட்டுமல்லாமல் வீட்டு உபயோக, உணவுப் பொருட்களும் இனி சிலிண்டருடன் சேர்த்து டெலிவரி செய்யப்படும்.

டாபருடன் ஒப்பந்தம்!

இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனமும் டாபர் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, டாபர் நிறுவனத்தின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருட்கள் (FMCG) இனி இந்தியன் ஆயில் சிலிண்டர்களுடனேயே டெலிவரி செய்யப்படும். இதன்படி, சிலிண்டர் டெலிவரி செய்யும் டெலிவெரி மேன் இனி டாபர் பொருட்களையும் டெலிவரி செய்வார்.

14 கோடிப் பேர் பயன்!

இந்த இரண்டு நிறுவனங்களின் ஒப்பந்தத்தால் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் சுமார் 14 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 12,750 விநியோகஸ்தர்களும், 90,000 டெலிவரி பணியாளர்களும் உள்ளனர். எனவே இந்த இப்பந்தத்தின் மூலம் டாபர் நிறுவனம் அதிக சந்தை வாய்ப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்