ஆப்நகரம்

அகவிலைப்படி உயர்வு கிடைக்காது? வெளியான அதிர்ச்சி தகவல்!

எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்!

Samayam Tamil 23 Apr 2022, 4:31 pm
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்க வாய்ப்பு குறைவு என்று தகவல் வெளியாகியுள்ளது. காரணம் இதுதான்...
Samayam Tamil dearness allowance for central government employees may not increase in july because of this reason
அகவிலைப்படி உயர்வு கிடைக்காது? வெளியான அதிர்ச்சி தகவல்!


காத்திருக்கும் ஊழியர்கள்!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. ஜனவரி மாதத்தில் ஒரு முறையும் ஜூலை மாதத்தில் ஒரு முறையும் திருத்தப்படும். சூழ்நிலையைப் பொறுத்து அது திருத்தப்படாமலும் போகலாம். அடுத்ததாக ஜூலை மாதத்தில் அகவிலைப்படி மேலும் உயர்த்தப்படும் என்று ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கவலை தரும் செய்தி காத்திருக்கிறது. ஏனெனில், ஜூலையில் அகவிலைப்படி உயர்வு வர வாய்ப்பு குறைவு என்று தெரிகிறது.

பென்சன் தொகை உயர்வு - அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை சில வாரங்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்தது. அகவிலைப்படி தற்போது 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக அதிகரிக்கும். அதேபோல, அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கவும் மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த லிங்க்கை கிளிக் செய்து அட்டகாசமான பரிசு வெல்லுங்கள்

ஜூலையில் கிடைக்குமா?

முதல் அகவிலைப்படி திருத்தம் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஜூலையில் மீண்டும் திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வழக்கமான எதிர்பார்ப்புதான். ஆனால், அகவிலைப்படி கணக்கீட்டுக்கான புள்ளிவிவரங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியாகியுள்ள தரவுகளின்படி, அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிகிறது. ஏனெனில் இப்போதுதான் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) புள்ளி விவரங்கள் வந்துள்ளன.

சம்பளம் குறைவு.. வாரத்துக்கு 4 நாள் வேலை.. என்ன சொல்கின்றன புதிய தொழிலாளர் சட்டங்கள்?

காரணம் என்ன?

2021 டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 125.4 ஆக இருந்தது. ஆனால் 2022 ஜனவரி மாதத்தில் அது 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக பதிவாகியுள்ளது. அடுத்ததாக பிப்ரவரி மாதத்திலும் 0.1 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக சரிவு ஏற்பட்டுள்ளதால், ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் அதிகரிப்பு இருக்காது என கூறப்படுகிறது. ஏனெனில் நுகர்வோர் விலைக் குறியீட்டை வைத்தே அகவிலைப்படியில் மாற்றம் செய்யப்படுகிறது. தயாரிக்கப்பட்டுள்ளது. AICPI இன் இந்தத் தரவு ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் வெளியிடப்படுகிறது.

லாக்கர் ரூல்ஸ் மாறிடுச்சு.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அப்டேட்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்