ஆப்நகரம்

HDFC ஊழியர்களுக்கு நிம்மதி.. பயப்படாதிங்க ஒன்னும் ஆகாது!

எச்டிஎஃப்சி - எச்டிஎஃப்சி வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு என்னாகும்?

Samayam Tamil 4 Apr 2022, 2:54 pm
இந்தியாவின் மிகப்பெரிய ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமாக எச்டிஎஃப்சி நிறுவனம் (HDFC) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதேபோல இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) செயல்பட்டு வருகிறது.
Samayam Tamil HDFC Bank


இந்நிலையில், எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் எச்டிஎஃப்சி வங்கியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் இது மிகப்பெரிய இணைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இணைப்பின்படி, எச்டிஎஃப்சி வங்கியில் எச்டிஎஃப்சி நிறுவனம் 41% பங்குகளை கைப்பற்றும். பங்குதாரர்களை பொறுத்தவரை, ஒவ்வொரு 25 எச்டிஎஃப்சி பங்குகளுக்கும் 42 எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் கிடைக்கும்.

கடன் வட்டி, EMI உயருமா? ரிசர்வ் வங்கி எடுக்கும் முக்கிய முடிவு!
2024ஆம் நிதியாண்டுக்குள் இரு நிறுவனங்களும் முழுமையாக இணைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியானதை தொடர்ந்து எச்டிஎஃப்சி பங்கு விலை பயங்கரமாக உயர்ந்தது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, எச்டிஎஃப்சி - எச்டிஎஃப்சி வங்கி இணைப்பால் இரு நிறுவனங்களின் ஊழியர்களின் நிலை என்னாகும் என்பது பெரும் குழப்பமாக இருந்தது. இதனால் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா எனவும் சந்தேகம் நிலவியது.

இந்நிலையில், எச்டிஎஃப்சி - எச்டிஎஃப்சி வங்கி இணைப்பால் எச்டிஎஃப்சி ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எச்டிஎஃப்சி நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்