ஆப்நகரம்

விஜய் மல்லையாவின் மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதின்றம் தொடர் கெடுபிடி

செக் மோசடி வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகும்படி அனுப்பிய சம்மனை ரத்து செய்யும்படி விஜய் மல்லையா சமர்ப்பித்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

TNN 29 Jul 2016, 10:07 pm
செக் மோசடி வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகும்படி அனுப்பிய சம்மனை ரத்து செய்யும்படி விஜய் மல்லையா சமர்ப்பித்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil delhi hc upholds summoning of vijay mallya in cheque bounce cases
விஜய் மல்லையாவின் மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதின்றம் தொடர் கெடுபிடி


தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து, ரூ.9,000 கோடிக்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு, அதனை திருப்பிச் செலுத்தவில்லை. மேலும், கறுப்புப் பண மோசடி, வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் நோக்கில் லண்டன் தப்பிச் சென்ற விஜய் மல்லையா, அங்கேயே தலைமறைவாக இருந்துவருகிறார்.

இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட காசோலை, வங்கியில் போதிய பணம் இல்லாத காரணத்தால், திரும்பிவந்துவிட்டது. இதுகுறித்து, தொடரப்பட்ட வழக்கில் விஜய் மல்லையா நேரில் ஆஜராகும்படி டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதுவரை நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வரும் அவர், தற்போது சம்மனை தள்ளுபடி செய்யக் கோரி, வழக்கறிஞர் மூலமாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எனினும், இதனை ஏற்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிஎஸ்.தேஜி, வழக்கு விசாரணயை சட்டப்படி விஜய் மல்லையா சந்தித்தே ஆக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்