ஆப்நகரம்

ஆன்லைன் கடன் ஆப்ஸ் அராஜகம்.. ரிசர்வ் வங்கிக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆன்லைன் கடன் ஆப் வழக்கு தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி ரிசர்வ் வங்கிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

Samayam Tamil 7 Apr 2022, 1:01 pm
அண்மைக்காலமாக ஆன்லைன் கடன் ஆப்களின் அராஜகம் அதிகரித்துவிட்டதாக பொதுவான புகார்கள் எழுந்துள்ளன. எந்தவொரு விதிமுறைகளுக்கும் உட்படாத கடன் ஆப்கள் மிக அதிக வட்டி வசூலிப்பதாகவும், கடன் வாங்கியவர்களை துன்புறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
Samayam Tamil online loan


இதுபோன்ற கடன் ஆப்கள் 7 நாள் முதல் 15 நாள் வரை குறுகிய கால பெர்சனல் கடன்களை கொடுக்கின்றன. அதிலும் கடன் தொகையில் 35% முதல் 45% தொகையை கட்டணம் என கூறி எடுத்துக்கொண்டு மீதத் தொகையை வழங்குகின்றன.

வழங்கப்படும் தொகைக்கும் ஒரு நாளைக்கு 1% அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வட்டியாக வசூலிக்கின்றன என இந்த பொதுநல வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் அல்லது தாமதமாக திருப்பிச் செலுத்துபவர்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஃபிக்சட் டெபாசிட் வட்டி குறைப்பு.. ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு!
இதையடுத்து, மிக அதிக வட்டிக்கு கடன் வழங்கி வரும் ஆன்லைன் கடன் ஆப்களை ஒழுங்குபடுத்த வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.

ஆன்லைன் கடன் ஆப்கள் குறித்து நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகும் அரசோ, ரிசர்வ் வங்கியோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரசாந்த் பூஷன் தெரிவித்தார். இதையடுத்து, பொதுமக்களிடம் கருத்து கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பு வழக்கறிஞர் வி.கிரி தெரிவித்தார்.

இதையடுத்து, நிபுணர் குழுவின் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அடுத்த விசாரணைக்குள் ரிசர்வ் வங்கி அறிக்கை தாக்கல் செய்யும்படி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 20ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்