ஆப்நகரம்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்.. சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பதில் அளிக்கும்படி சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

Samayam Tamil 20 May 2022, 2:44 pm
பங்குச் சந்தை ஊழலில் ஈடுபட்டதாகவும், தேசிய பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்கள், முக்கிய விவரங்களை கசியவிட்டதாகவும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil Chitra Ramkrishna


இதையடுத்து அவரை கடந்த மார்ச் 6ஆம் தேதி டெல்லியில் சிபிஐ கைது செய்தது. இவ்வழக்கு தற்போது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சித்ரா ராமகிருஷ்ணா தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றன் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா தனக்கு ஜாமீன் வழங்கும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Post Office கணக்குதாரர்களுக்கு புது வசதி.. இனி இதெல்லாம் கிடைக்கும்!
இவ்வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுதிர் குமார் ஜெயின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு குறித்து பதில் அளிக்கும்படி சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கின் அடுத்த விசாரணை மே 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய ஆனந்த் சுப்ரமணியனும் தற்போது திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்