ஆப்நகரம்

ரயில் டிக்கெட்.. மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை கிடைக்குமா?

ரயில்வே துறையின் வருமானம் அதிகரித்துள்ளதால் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 13 May 2023, 2:18 pm
கடந்த நிதியாண்டில் இந்திய ரயில்வே பல விஷயங்களில் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருந்தது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு வழித்தடங்களில் எட்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன. இது தவிர, பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் வருவாயில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதில் 80 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் பயணிகள் பிரிவில் ரூ. 6,345 கோடியாக இருந்தது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச வருமானமாகும்.
Samayam Tamil train ticket


64 கோடிப் பேர் பயணம்!

கடந்த நிதியாண்டில் தெற்கு ரயில்வே ரூ. 3,539.77 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. முன்னதாக, 2019-20 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு கிடைத்த அதிகபட்ச வருவாய் ரூ. 5,225 கோடி மட்டுமே. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 2022-2023ஆம் ஆண்டில் சுமார் 64 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2021-22ல் பயணித்த 34 கோடி பயணிகளை விட 88.5 சதவீதம் அதிகம் ஆகும்.

விலக்கு அளிக்க கோரிக்கை!

சரக்கு போக்குவரத்து துறையிலும் தெற்கு ரயில்வே பல சாதனைகளைப் படைத்துள்ளது. 4.05 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 5.2 மெட்ரிக் டன் பெட்ரோலியம் மற்றும் 3.23 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஏற்றப்பட்டது. ரயில்வே துறைக்கு அபரிமிதமான வருவாய் கிடைத்துள்ளதை அடுத்து, மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டில் வழங்கப்பட்டு வந்த சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

கொரோனாவால் சலுகை ரத்து!

2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பிரச்சினை தொடங்கியபோது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிக்கெட் சலுகை நிறுத்தப்பட்டது. கொரோனா பிரச்சினை தீர்ந்து அனைத்து வசதிகளும் ரயில்வேயால் முறைப்படுத்தப்பட்ட பிறகும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்த வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகளின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மீண்டும் கிடைக்குமா?

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “ரயில்வேயில் பயணிகளுக்கு ஏற்கெனவே 55 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது வருவாய் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் சலுகை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்