ஆப்நகரம்

ரூபாய் நோட்டு பிரச்னை: தமிழகத்தில் முட்டை, கோழி மற்றும் டாஸ்மாக் விற்பனை சரிவு

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாத விவகாரத்தால், தமிழகம் முழுவதும் முட்டை, கறிக்கோழி மற்றும் டாஸ்மாக் விற்பனை சரிவடைந்துள்ளது.

TOI Contributor 17 Nov 2016, 8:55 pm
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாத விவகாரத்தால், தமிழகம் முழுவதும் முட்டை, கறிக்கோழி மற்றும் டாஸ்மாக் விற்பனை சரிவடைந்துள்ளது.
Samayam Tamil demonetise egg chicken and tasmac sales down in tamilnadu
ரூபாய் நோட்டு பிரச்னை: தமிழகத்தில் முட்டை, கோழி மற்றும் டாஸ்மாக் விற்பனை சரிவு


மத்திய அரசு கடந்த வாரத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து, அதனை பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வங்கிகளிலும் உடனடியாக பணப்பரிமாற்றம் செய்ய முடியாத சூழல் உள்ளது.

இதன்காரணமாக, தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் முட்டை, கறிக்கோழி விற்பனையும் பாதித்துள்ளது. நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை கடந்த 4 நாட்களில் 40 காசு குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் முட்டை விலை 20 காசுகள் குறைந்துள்ளது. கறிக்கோழி விற்பனையும் 30% வரை குறைந்துள்ளது.

இதற்கடுத்தப்படியாக, டாஸ்மாக் கடைகளில் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. ஆரம்ப நாட்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பின்னர் அவற்றை ஏற்க டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து, டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 6,195 டாஸ்மாக் கடைகளின் வருமானத்தில் ரூ.100 கோடி வரை தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ரூ.2000 நோட்டுகளை வாடிக்கையாளர் கொடுத்தாலும், சில்லறை தர முடியவில்லை எனவும் டாஸ்மாக் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Demonetise: Egg, Chicken and TASMAC sales down in Tamilnadu

அடுத்த செய்தி

டிரெண்டிங்