ஆப்நகரம்

ஆச்சரியப்படுத்தும் அரசு திட்டம் - ஜன் தன் வங்கிக் கணக்குகளில் ரூ.1 லட்சம் கோடியை நெருங்கிய டெபாசிட்!

மோடி அரசு தொடங்கிய ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் தொகை பெருமளவு அதிகரித்துள்ளது.

TIMESOFINDIA.COM 21 Apr 2019, 4:31 pm
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் வகையில் ஜன் தன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி கோடிக்கணக்கில் வங்கிக் கணக்குகள் இலவசமாக தொடங்கப்பட்டன. இதனை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்தது.
Samayam Tamil Jan Dhan Yojana


இதன் டெபாசிட் தொகை தற்போது ரூ.1 லட்சம் கோடியை நெருங்க உள்ளது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நிலவரப்படி, அரசின் புள்ளி விவரப்படி ரூ.97,665.66 கோடி இருந்துள்ளது. இதுவரை ரூ.35.39 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 27ஆம் தேதி நிலவரப்படி, டெபாசிட் தொகை ரூ.96,107.35 கோடி.

அதற்கு முந்தைய வார நிலவரப்படி, ரூ.95,382.14 கோடி இருந்துள்ளது. இதில் 27.89 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 28, 2014ல் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது, அனைத்து குடும்பத்தினரும் வங்கி வசதிகளை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விபத்து காப்பீட்டு தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது ஆகஸ்ட் 28, 2018க்கு பிறகு திறக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு பொருந்தும்.

அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பு ரூ.10,000 என இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் ஒவ்வொரு இல்லத்திற்கும் என்பதில் இருந்து, ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வங்கிக் கணக்கு என்று கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 50%க்கும் அதிகமான ஜன் தன் வங்கி கணக்குகள் பெண்கள் வைத்துள்ளனர்.

50% வங்கிக் கணக்குகள் கிராமப்புற மற்றும் பாதி - நகர்ப்புற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சேமிப்பு, கிரெடிட், காப்பீடு, ஓய்வூதியம், குறைந்தபட்ச வருமானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறும் வண்ணமும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்