ஆப்நகரம்

பென்சன் வாங்குவோருக்கு நிம்மதி: இனி எக்ஸ்ட்ரா பணமும் கிடைக்கும்!

இனி ஒவ்வொரு மாதமும் கடைசி தேதிக்குள் பென்சன் கரெக்டா வந்துடும்.

Samayam Tamil 27 Jan 2022, 10:07 am
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி தேதிக்குள் பென்சன் வரவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
Samayam Tamil Pension


அதில், ஓய்வூதியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளுக்குள் பென்சன் வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் போய் சேர வேண்டியதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பென்சன் விநியோகிக்கும் வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பென்சன் வழங்குவதை பொறுத்தவரை அனைத்து PF அலுவலகஙளும், வங்கிகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி தேதிக்குள் பென்சன் கிடைக்கும் என்று EPFO தெரிவித்துள்ளது.

சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி.. வெளியான சூப்பர் அறிவிப்பு!
பென்சன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், ஆண்டுக்கு 8% என்ற நிலையான வட்டிக் கணக்கில் நிலுவைத் தொகைக்கு வங்கிகள் இழப்பீடு செலுத்த வேண்டுமென்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை. இந்த இழப்பீட்டுத் தொகை ஓய்வூதியதாரரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும்.

உரிய தேதிக்குள் பென்சன் கிடைக்காமல் தாமதத்தை சந்தித்து வந்த ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அறிவிப்பு பெரும் நிம்மதியை தந்துள்ளது. இனி பென்சன் பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதற்கு ஏற்ப இழப்பீடும் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்