ஆப்நகரம்

இனி சிலிண்டர் வாங்க முடியாது.. உடனே இந்த வேலையை முடிங்க.. இல்லனா கிடைக்காது!

உங்களுடைய ஆதார் கார்டை எடுத்துக் கொண்டு உடனடியாக செல்ல வேண்டும்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 1 May 2024, 10:05 am
உடனடியாக இந்த வேலையை முடிக்காத சிலிண்டர் பயனாளிகளுக்கு சிலிண்டர் இணைப்பு நிறுத்தப்படும். மானிய உதவியும் கிடைக்காது.
Samayam Tamil do this work immediately otherwise lpg cylinder connection will be stopped
இனி சிலிண்டர் வாங்க முடியாது.. உடனே இந்த வேலையை முடிங்க.. இல்லனா கிடைக்காது!


சமையல் சிலிண்டர்!

இந்தியாவில் இப்போது பெரும்பாலான வீடுகளில் சமையல் சிலிண்டர் பயன்பாடு வந்துவிட்டது. கிராமப்புறங்களில் கூட சமையல் சிலிண்டர்களில் சமைக்கத் தொடங்கிவிட்டனர். அதுவும் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்புகள் இலவசமாக வழங்கப்படுவதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இணைப்பு துண்டிப்பு!

சிலிண்டர் இணைப்பு கிடைத்துவிட்டால் அதை வைத்து கடைசி வரைக்கும் சமைக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு விதிமுறை உள்ளது. சிலிண்டர் இணைப்பில் ஒரு அப்டேட்டை நீங்கள் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படலாம்.

சிலிண்டர் கிடைக்காது!

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டர்களைப் பெறுவதற்கு இ-கேஒய்சி சரிபார்ப்பை கட்டாயமாக்குவதற்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்த செயல்முறை மிகவும் எளிமையானது. சமையல் சிலிண்டர்களுக்கான கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை இன்னும் முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு சிலிண்டர்கள் வழங்கப்படாமல் போகலாம். இ-கேஒய்சி இல்லாமல் சிலிண்டர் வழங்குவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மானியம் வராது!

உஜ்வாலா யோஜனா வாடிக்கையாளர்களின் கேஒய்சி செயல்முறை முடிந்துவிட்டது. அதன் பிறகு, பொது வாடிக்கையாளர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. கேஒய்சி சரிபார்ப்பு செய்யாவிட்டால் மானியம் கிடைக்காமல் போகும். இணைப்பும் துண்டிக்கப்படலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கேஒய்சி செயல்முறை முடிந்ததும் சிலிண்டர் மானியத் தொகை உஜ்வாலா யோஜனா வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

கேஒய்சி சரிபார்ப்பு செய்வது எப்படி?

சமையல் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் e-KYC சரிபார்ப்புக்காக தங்கள் எரிவாயு நிறுவனத்தை அணுக வேண்டும். உங்கள் எரிவாயு நிறுவனம் இந்த செயல்முறையை மிகவும் எளிதாக முடித்துவிடும். இதற்கு வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டதும் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறை முடிவடையும்.

மானியம் நீட்டிப்பு!

கடந்த மார்ச் மாதம், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த மானியம் 2024 மார்ச் மாதம் வரை பொருந்தும். இப்போது இந்த மானியம் 2025ஆம் ஆண்டின் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சிலிண்டர் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்