ஆப்நகரம்

சிலிண்டர் மானியம் வேணுமா? உடனே இதைப் பண்ணுங்க!

ஆதாரை இணைத்தால் மட்டும் சமையல் சிலிண்டருக்கான மானியம் கிடைக்கும்.

Samayam Tamil 18 Sep 2021, 9:39 pm
சமையல் சிலிண்டர் இல்லாத வீடே இல்லை என்று கூறும் அளவுக்கு LPG சமையல் எரிவாயு பயன்பாடு இந்தியாவில் பரவலாக உள்ளது. இன்னும் பல கிராமங்களில் விறகுகளைப் பயன்படுத்தி வந்தாலும் அவர்களுக்கும் சுகாதாரமான சமையல் எரிவாயு கிடைக்க அரசு தரப்பிலிருந்து இலவச எரிவாயு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலை அதிகமாக இருந்தாலும் அந்த சிலிண்டருக்கு மானியமும் வழங்கப்படுகிறது. அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் இந்த மானிய உதவியைப் பெறுவதற்கும் அனைவருக்கும் ஆதார் கட்டாயமாகும்.
Samayam Tamil lpg


ஆதார் கார்டை எல்பிஜி கனெக்‌ஷனுடன் இணைத்தால் மட்டுமே மானியம் கிடைக்கும். வங்கிக் கணக்கும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்தபின்னர்தான் ஆதார் கார்டை எல்பிஜி எரிவாயு இணைப்புடன் இணைக்க முடியும். அவ்வாறு இணைத்தால் மட்டுமே மானியத் தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆதார் கார்டு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வங்கிக்கு நேரடியாகச் சென்று தெரிந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவும் பார்க்க முடியும். ஆதார் கார்டை எல்பிஜி கனெக்‌ஷனுடன் இணைப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. IVR call, SMS, வெப்சைட் போன்ற வழிகளில் இணைக்கலாம்.

HP கேஸ் வைத்திருப்பவர்கள் 1800-2333-555 என்ற எண்ணுக்கு அழைத்து, ஆதார் நம்பர் உள்ளிட்ட விவரங்களை வழங்கி இணைக்கலாம். www.rasf.uiadai.gov.in என்ற வெப்சைட்டில் சென்றும் இணைக்க முடியும்.

பாரத் கேஸ், இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்களும் இதே முறையில் ஆதாரை இணைக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்