ஆப்நகரம்

விமானப் பயணிகளை ஓட ஓட விரட்டும் கொரோனா!

கொரோனா பாதிப்பால் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Jun 2021, 8:08 pm
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பீதியால் விமானப் போக்குவரத்துச் சேவை முடங்கியது. ஊரடங்கு காலத்தில் விமானப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் விமானப் போக்குவரத்துச் சேவையில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த ஆண்டிலும் சரிவு நீடிக்கிறது. விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021 மே மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil air


அதாவது மே மாதத்தில் மொத்தம் 21.1 லட்சம் பேர் மட்டுமே உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். சென்ற ஆண்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது 2020 மார்ச் 25 முதல் 2020 மே 24 வரை விமானப் போக்குவரத்துச் சேவை முடக்கப்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் 19.8 லட்சம் பேரும், ஜூலை மாதத்தில் 21 லட்சம் பேரும் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சற்று வளர்ச்சி காணப்பட்டது. பிப்ரவரி - மார்ச் மாதங்களில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 78 லட்சத்தைத் தொட்டது.

எல்லாருக்கும் சம்பளம் உயர்வு... எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
ஆனால், கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியதால் ஏப்ரல் மாதத்தில் 21.1 லட்சம் பேர் மட்டுமே பயணம் செய்தனர். தற்போது மே மாதத்திலும் வீழ்ச்சி காணப்படுகிறது. ஜூன் மாதத்திலும் இதே நிலை நீடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வருவாய் ஈட்ட முடியாமலும் நிதி நெருக்கடியாலும் தவித்து வரும் நிலையில் தற்போது கொரோனா பாதிப்பால் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்