ஆப்நகரம்

விமானத்தை நெருங்க முடியாத கொரோனா... இன்னும் எத்தனை நாளைக்கு?

சென்ற மாதத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை 9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Samayam Tamil 18 Mar 2020, 4:50 pm
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், தனிமைப்படுத்திக்கொள்ளவும், தனிநபர் சுகாதாரத்தைக் காக்கவும், நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்க்கவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு நேற்று (மார்ச் 17) முதல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil விமானத்தை நெருங்க முடியாத கொரோனா அச்சத்தில் விமானப் போக்குவரத்துச் சேவை


இந்நிலையில், கொரோனா அச்சத்தால் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தகவல்கள் வாயிலாகத் தெரிகிறது. இன்று (மார்ச் 18) சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் உள்நாட்டில் 1.2 கோடி பேர் விமானத்தில் பயணித்துள்ளனர். இது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயணித்த 1.1 கோடி பயணிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும்.

கொரோனாவால் வந்த வேதனை: மால்களின் வருமானம் போச்சு!

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒட்டுமொத்தமாக 2.5 கோடி பேர் விமானங்களில் பயணித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை (2.4 கோடி) காட்டிலும் 5.4 சதவீதம் உயர்வாகும். இருந்தாலும் கொரோனா வைரஸ் தாக்கம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை கடந்த இரண்டு வாரங்களாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. இதுபற்றிய விரிவான அதிகாரப்பூர்வ விவரங்கள் மார்ச் மாதத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’வெட்டாத கிணறுக்கு ரசீது’: யெஸ் வங்கிக்கு என்னாச்சு?

பிப்ரவரி மாதத்தில் இண்டிகோ நிறுவனத்தின் சந்தைப் பங்கு 48 சதவீதமாகவும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு 15.3 சதவீதமாகவும், ஏர் இந்தியாவின் பங்கு 12 சதவீதமாகவும், கோ ஏர் நிறுவனத்தின் பங்கு 10 சதவீதமாகவும், ஏர் ஏசியா நிறுவனத்தின் பங்கு 7.3 சதவீதமாகவும், விஸ்தாரா நிறுவனத்தின் பங்கு 6.7 சதவீதமாகவும், இதர சிறு நிறுவனங்களின் பங்கு 0.7 சதவீதமாகவும் இருந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்