ஆப்நகரம்

இருமடங்கு உயரும் கேஸ் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி!

சர்வதேச இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டால் கேஸ் விலை இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 22 Feb 2022, 12:41 pm
சர்வதேச அளவில் எரிவாயு தட்டுப்பாடு கடுமையாகியுள்ள நிலையில், விரைவில் கேஸ் விலை இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே எரிவாயு விலை தலைவலியாக இருக்கும் நிலையில், மேற்கொண்டு விலை உயரும் என்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.
Samayam Tamil gas


வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவிற்கான டிமாண்ட் அதிகரித்துள்ள போதிலும், எரிவாயு உற்பத்தி தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. இதனால் சர்வதேச அளவில் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

எரிவாயு பற்றாக்குறையின் தாக்கம் ஏற்கெனவே சர்வதேச நாடுகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்கள் எரிவாயு கொள்முதலை குறைத்துள்ளன. தற்போதைய சூழலில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், ஏப்ரல் மாதம் எரிவாயு பற்றாக்குறையின் சுயரூபம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. தள்ளுபடி விலையில் டிக்கெட் அள்ளிட்டு போங்க!!
இயற்கை எரிவாயு விலையை ஏப்ரல் மாதம் மத்திய அரசு திருத்தவுள்ளது. அப்போது சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப விலை திருத்தம் செய்யப்படும் என கூறுகின்றனர். இதன்படி, ஏப்ரல் மாதம் எரிவாயும் விலை இருமடங்குக்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் இயற்கை எரிவாயு விலையை மத்திய அரசு திருத்துகிறது. சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை ஒவ்வொரு டாலர் உயர்வுக்கும் இந்தியாவில் 4.5 ரூபாய் உயரும். இயற்கை எரிவாயு வாகனங்களிலும், வீடுகளில் சமையலுக்கும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்