ஆப்நகரம்

​கிரெடிட் கார்டில் செய்யவே கூடாத தவறுகள்.. கொஞ்சம் மிஸ்ஸானால் அவ்ளோதான்!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 25 Apr 2024, 2:08 pm
உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால் கண்டிப்பாக இந்த விஷயங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடும்.
Samayam Tamil dont make these mistakes while using credit cards otherwise you will lose big
​கிரெடிட் கார்டில் செய்யவே கூடாத தவறுகள்.. கொஞ்சம் மிஸ்ஸானால் அவ்ளோதான்!


கிரெடிட் கார்டு!

இந்தியாவில் இப்போது நிறையப் பேர் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். சேமித்த பணத்தை செலவழிப்பதற்குப் பதிலாக, கிரெடிட் கார்டில் இருக்கும் பணத்தை கடனாக வாங்கி செலவழித்து பின்னர் அதை திருப்புச் செலுத்தும் பழக்கத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகின்றனர். இது பெரிய கடன் வலையில் சிக்க வைக்கலாம். கிரெடிட் கார்டை சரியான வழியில் பயன்படுத்தினால் நன்மை அதிகம். ஆனால் அதுவே பிரச்சினையாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பு முக்கியம்!

நிறையப் பேர் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு ஷாப்பிங் செய்கிறார்கள். பின்னர் அதை EMI ஆக மாற்றி பணம் செலுத்துகின்றனர். குறிப்பாக ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இணையதளங்களில் எதையும் வாங்குவதற்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், பரிவர்த்தனைக்கு நீங்கள் எப்போதும் கார்டு டோக்கனைசேஷனைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், உங்கள் கிரெடிட் கார்டு தொடர்பான தரவு பாதுகாப்பாக இருக்கும். மேலும் அது தவறாகப் பயன்படுத்தப்படாது.

கவனம் தேவை!

கிரெடிட் கார்டு எண், காலாவதி தேதி, CVV எண் அல்லது கிரெடிட் கார்டு ரிப்போர்ட் போன்ற கிரெடிட் கார்டு விவரங்களை ஆன்லைன் தளங்கள் அல்லது செயலிகளில் பகிர்வதைத் தவிர்க்கவும். கிரெடிட் கார்டு தொடர்பான தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம். செயலிகள் அல்லது இணையதளங்களில் கிரெடிட் கார்டுகளைச் சேமிப்பதைத் தவிர்க்கவும். இப்போதெல்லாம் மக்கள் பெரும்பாலும் ஷாப்பிங் செய்வதற்கு சில இணையதளம் அல்லது செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். ஷாப்பிங் செய்யும் போது, ​​உங்கள் அடுத்த வாங்குதலை எளிதாக்கும் வகையில் கிரெடிட் கார்டை சேமித்தால் அது தவறாக மாற வாய்ப்பு உள்ளது.

எங்கும் பகிரக் கூடாது!

மெசேஜ், வாட்ஸ்அப், சோஷியல் மீடியா ஆப் அல்லது மெயில் மூலம் தெரியாத லிங்க் ஏதேனும் உங்களுக்கு அனுப்பப்பட்டால், அத்தகைய லிங்க்கை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். அத்தகைய லிங்க்கை நீங்கள் கிளிக் செய்தவுடன் உங்கள் மொபைல், லேப்டாப் அல்லது கணினி ஹேக் செய்யப்படலாம். அதன் உதவியுடன் ஹேக்கர்கள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்