ஆப்நகரம்

பூ விவசாயிகள் மகிழ்ச்சி.. காரணம் இதுதான்!

கதம்ப மாலை கட்டும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

Samayam Tamil 4 Oct 2022, 11:11 am
நிலக்கோட்டையில் கதம்ப மாலை கட்டும் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil flower


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கதம்ப மாலை கட்டுவதற்கு பயன்படும் பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டியதால் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஆயுதபூஜை பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் நேற்றைய தினம் கதம்ப மாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. கடந்த காலங்களில் ஒரு பை ரூபாய் 50க்கு விற்பனையான அரளி பூ அதிகபட்ச விலையாக ரூபாய் 400 முதல் 450 வரை விற்பனையானது.

பெட்ரோல் விலை: இன்னைக்கு ரேட் இதுதான்!

அதேபோல, செண்டுமல்லி ரூபாய் 100க்கும், கோழிக்கொண்டை பூ ரூபாய் 130க்கும், செவ்வந்திப்பூ ரூபாய் 350க்கும், வாடாமல்லி ரூபாய் 100க்கும், துளசி ரூபாய் 60க்கும், பன்னீர் ரோஸ் ரூபாய் 300க்கும், பட்டன் ரோஸ் ரூபாய் 300க்கும், சம்பங்கி பூ 320க்கும் விற்பனையாகின.

Gold rate: தங்கம் வாங்குவோர் தலையில் இடி! நகை வாங்குறது கஷ்டம்!

கடந்த காலங்களில் அரளி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களுக்கு விலை கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த ஆயுத பூஜை விழா பூ விற்பனை தங்களுக்கு ஒருநாள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்