ஆப்நகரம்

தீபாவளிக்கு 11 நாள் லீவு கொடுத்த நிறுவனம்.. குஷியில் ஊழியர்கள்!

தீபாவளிக்கு தனது ஊழியர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வழங்கியுள்ளது மீஷோ நிறுவனம்.

Samayam Tamil 25 Sep 2022, 11:22 am
பண்டிகைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், தீபாவளிக்கு ஒரு நாள் லீவு கிடைப்பதே பெரிய அதிசயமாக உள்ளது. ஆனால், தீபாவளி பண்டிகை நேரத்தில் ஊழியர்கள் நன்கு ஓய்வு எடுத்து மனநலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக 11 நாட்கள் விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளது மீஷோ நிறுவனம்.
Samayam Tamil meesho


மின்னணு வர்த்தக நிறுவனமான மீஷோ (Meesho) ஆன்லைன் வழியாக ஆடைகள், ஃபேஷன் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு மீஷோ நிறுவனம் பண்டிகைக்காலத்தின்போது தனது ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்தது.

இந்நிலையில், வரும் தீபாவளிக்கு தனது ஊழியர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வழங்குவதாக மீஷோ அறிவித்துள்ளது. இதன்படி, அக்டோபர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை மீஷோ நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு டாட்டா காட்டும் மெட்டா.. பீதியில் பணியாளர்கள்!
இதுகுறித்து மீஷோ தலைமை நிர்வாகி விதித் ஆத்ரே ட்விட்டரில், “விண்வெளி வீரர்களுக்கு கூட ஓய்வு நேரம் வேண்டும். எனவே, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மீஷோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பண்டிகைக்காலத்தில் 11 நாட்கள் (அக்டோபர் 22 - நவம்பர் 1) விடுமுறை வழங்குகிறது.

வேலை என்பது முக்கியம்தான். ஆனால், மன நலம் விலை மதிப்பில்லாதது” என்று தெரிவித்துள்ளார். பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்கள் பர்ன் அவுட், பதற்றம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இதனால் வேலையும் பாதிக்கப்படுகிறது. எனவே, விடுமுறையால் ஊழியர்கள் புத்துணர்ச்சி பெற முடியும் என மீஷோ கருதுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்