ஆப்நகரம்

இளம் வயதில் முதலீடு செய்ய இதுதான் சிறந்த சாய்ஸ்!

பிஎஃப் திட்டத்தில் இளம் வயதிலேயே முதலீடு செய்வதன் பலன்களை பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 25 Oct 2020, 1:30 pm

பிபிஎஃப் நீண்டகால அடிப்படையில் ஒரு அற்புதமான முதலீட்டுத் திட்டம். பிஎஃப் திட்டத்தை ஒரு முதலீடு என சொல்வதை காட்டிலும் பாதுகாக்கு எனலாம். இத்திட்டம் மத்திய அரசின் ஆதரவுடன் இருப்பது கூடுதல் பலம். இதுமட்டுமல்லாமல், வரிச் சலுகைகள், வட்டி மற்றும் மெச்சூரிட்டிக்கு வரி தள்ளுபடி ஆகியவை பிஎஃப் திட்டத்தின் அட்டகாசமான அம்சங்கள்.
Samayam Tamil PPF


வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி கீழ் வரிச் சலுகைகளை பெற மிகவும் விரும்பித் தேர்வு செய்யப்படும் முதலீடுதான் பிஎஃப். எனினும், பிஎஃப் திட்டத்தின் மிக இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்கினால் அதிக பயன் கிடைக்கும். அதாவது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் 15 ஆண்டு காலம் நிறைவடைந்துவிடும்.

கடன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்: மத்திய அரசின் அடடே சலுகை!

உதாரணமாக, 23 வயதில் பிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், 38 வயதிலேயே 15 ஆண்டுக் காலம் நிறைவடைந்துவிடும். 15 ஆண்டு நிறைவுக்கு பின் ஐந்து ஆண்டுகள் என்ற அடிப்படையில் நீங்கள் பிஎஃப் திட்டத்தை நீட்டித்துக்கொள்ளலாம். உதாரணமாக, 43 வயது வரை நீட்டிக்கலாம். பிறகு தேவையெனில் 48 வயது வரை நீட்டிக்கலாம்.

நீட்டிப்புக்கு பிறகு டெபாசிட் செலுத்தியாக வேண்டுமென கட்டாயமில்லை. அதேபோல, டெபாசிட் செய்ய விரும்பினால் செலுத்தலாம். சட்டப்படி, நீட்டிப்புக்கு பின், 80சி பிரிவு கீழ் வரிச் சலுகை பெறும் வரை டெபாசிட் செய்யலாம். டெபாசிட் செய்யாவிட்டாலும், ஏற்கெனவே இருக்கும் தொகைக்கு வட்டி வருமானம் கிடைக்கும்.

பிஎஃப் கணக்கு மெச்சூரிட்டிக்கு பின் ஓராண்டுக்குள் நீட்டிப்புக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பிஎஃப் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. பிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு கிடையாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்