ஆப்நகரம்

சிலிண்டர் மானியம் வருதா இல்லையா? ஈசியா நீங்க கண்டுபிடிக்கலாம்!

இந்த ஒரு ஆப் இருந்தா போதும்!

Samayam Tamil 23 May 2022, 4:04 pm
சமையல் சிலிண்டருக்கு அரசிடமிருந்து வரும் மானியத் தொகை குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள இதைச் செய்தாலே போதும்.
Samayam Tamil easy way to check your lpg cylinder subsidy status using delivery man app
சிலிண்டர் மானியம் வருதா இல்லையா? ஈசியா நீங்க கண்டுபிடிக்கலாம்!


சிலிண்டருக்கு மானியம்!

வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 1000 ரூபாய்க்கு மேல் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர். இன்னொரு புறம் சிலிண்டருக்கான மானியப் பணம் வரவில்லை என்று பலர் புகார் கூறிவருகின்றன. சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்திவிட்டதாகவும் வதந்தி பரவிவருகிறது.

200 ரூபாய் மானியம்!

சிலிண்டர் மானியம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் சில நாட்களுக்கு முன்னர் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் சிலிண்டர் பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனாலும் இந்த மானியம் என்பது உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு மட்டுமே என்று கூறப்படுகிறது.

மானியம் வருதா இல்லையா?

நிறையப் பேருக்கு சிலிண்டர் மானியம் வருவதே தெரிவதில்லை. சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததற்கான SMS வாடிக்கையாளர்களுக்கு அரசு தரப்பிலிருந்து அனுப்பப்படுகிறது. ஆனாலும் நிறையப் பேருக்கு SMS வருவதில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, சிலிண்டர் மானியம் வருவதைக் கண்டுபிடிக்க mylpg இணையதளம் உள்ளது. ஆனால் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

மொபைல் ஆப்!

சிலிண்டரை டெலிவரி எடுத்துவரும் டெலிவரி மேனிடமே வாடிக்கையாளர்கள் மானியம் குறித்து தெரிந்துகொள்ளலாம். சிலிண்டர் டெலிவரி மேன்களுக்காகவே பிரத்தியேகமாக மொபைல் ஆப் உள்ளது. அதில் சிலிண்டர் சேவை தொடர்பான அனைத்து விஷயங்களும் உள்ளன. டெலிவரி விவரம், பணம் செலுத்துவது போன்ற விவரங்களோடு சிலிண்டர் மானியம் தொடர்பான விவரங்களையும் அவர்கள் பார்க்க முடியும்.

விட்ரான் ஆப்!

HP கேஸ் சிலிண்டர் டெலிவரி மேன்களிடம் vitran என்ற மொபைல் ஆப் உள்ளது. அவர்கள் வேலை செய்யும் சிலிண்டர் ஏஜென்சியுடன் அது இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஆப் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களது மானியம் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் நேரடியாக அந்த ஆப்பில் சென்று பார்க்க முடியாது. ஆனால் டெலிவரி மேனிடம் கேட்டு கடந்த ஒரு வருடத்துக்கான மானியத் தொகை குறித்து முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்