ஆப்நகரம்

ஒமைக்ரானால் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தா?

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஒமைக்ரானின் தாக்கம் எப்படி உள்ளதென்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 19 Jan 2022, 11:24 am
2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. இதிலிருந்து மீண்டு வரவே ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. பொருளாதாரச் சலுகைகள், ஊரடங்கு தளர்வுகள், கொரோனா தடுப்பூசித் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாறிய கொரோனா மீண்டும் இந்தியாவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
Samayam Tamil omicron


ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த நாட்டின் பல்வேறு இடங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதன் விளைவாக 2020ஆம் ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியப் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியைச் சந்திக்குமோ என்ற அச்சம் பரவலாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய ரிசர்வ் வங்கி தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா அளவுக்கு இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.

மிரட்டும் ஒமைக்ரான்.. இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்து.. ஐநா எச்சரிக்கை!
கொரோனா அலை பாதிப்பு போல ஒமைக்ரான் பாதிப்பு இருக்காது எனவும், இது தற்காலிகம்தான் எனவும் கூறியுள்ள ரிசர்வ் வங்கி, இந்தியப் பொருளாதாரத்தின் பிரகாசமான எதிர்காலம் கண்முன் தெரிவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. புத்தாண்டு தொடங்கியுள்ள சூழலில், சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் வீழ்ச்சிப் பாதையிலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்