ஆப்நகரம்

இல்லத்தரசிகளுக்கு பிரச்சினை.. எண்ணெய் விலை பயங்கரமா உயரப்போகுது!

சமையல் எண்ணெய் விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்.

Samayam Tamil 25 Apr 2022, 4:13 pm
அண்மைக்காலமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பாமாயில் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான இந்திய பொருளாதார அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Samayam Tamil cooking oil


பாமாயில் விலை உயர்வுக்கு என்ன காரணம்? உலகிலேயே பாமாயில் உற்பத்தியில் மிகப்பெரிய நாடு இந்தோனேசியா. இந்தியாவின் பாமாயில் தேவையில் 50% இந்தோனேசியாவில் இருந்துதான் வருகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவிலேயே சமையல் எண்ணெய் விலை 50% வரை உயர்ந்துள்ளது.

சமையல் எண்ணெய் விலை உயர்வை சமாளிப்பதற்காக பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துவிட்டது. இதனால் சர்வதேச சந்தையில் பாமாயிலுக்கு டிமாண்ட் தாறுமாறாக உயர்ந்து பாமாயில் விலையும் கடகடவென உயர்ந்துவிட்டது.

வீட்டுக் கடன் EMI குறைப்பது எப்படி? செம ஐடியா!
இதனால் உணவு விலை உயர்ந்து பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்தோனேசிய அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் பாமாயில் தடையால் இந்தியாவில் பாமாயில் விலை கடுமையாக உயர்ந்து தீவிரமான பின்விளைவுகள் ஏற்படும் எனவும், எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்தோனேசியாவுடன் தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க ரஷ்யா - உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்