ஆப்நகரம்

பராக் அகர்வாலுக்கு கெட் அவுட்.. எலான் மஸ்க் போடும் கணக்கு.. பீதியில் ட்விட்டர் ஊழியர்கள்!

பராக் அகர்வாலை ட்விட்டர் தலைமை பதவியில் இருந்து வெளியேற்ற எலான் மஸ்க் திட்டம்.

Samayam Tamil 3 May 2022, 1:07 pm
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை வாங்குவதற்கு முயற்சித்து வந்தார். இதற்காக முதலில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் வாங்கினார்.
Samayam Tamil Elon musk


பின்னர் ட்விட்டரையே மொத்தமாக விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு வாங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை அதிகாரி பராக் அகர்வால் வெளியேற்றப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக கடந்த நவம்பர் மாதம் பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தலைமை பதவிக்கு வேறு ஒரு நபரை எலான் மஸ்க் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுல வந்து பண்ணுங்க... எலான் மஸ்க்குக்கு தூண்டில் போடும் நிதின் கட்கரி!
ட்விட்டர் நிர்வாகக் குழுவின் தலைவர் பிரெட் டெய்லரிடம் கடந்த மாதம் எலான் மஸ்க் பேசியபோது தற்போதைய ட்விட்டர் நிர்வாகத்தின் மீது தனக்கு நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார். இந்த சூழலில், தலைமை பதவிக்கு புதிய நபரை எலான் மஸ்க் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே பராக் அகர்வால் விரைவில் தலைமை பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பராக் அகர்வால் வெளியேற்றப்பட்டால் அவருக்கு 42 மில்லியன் டாலர் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பராக் அகர்வால் மட்டுமல்லாமல் ட்விட்டரில் பல அடுக்குகளில் ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் ஊழியர்களே அண்மைக்காலமாக வெளிப்படையாக பேசத்தொடங்கிவிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்