ஆப்நகரம்

EPFO: பங்குச் சந்தையில் முதலீட்டை அதிகரிக்க திட்டம்!

பங்குச் சந்தையில் முதலீட்டு வரம்பை அதிகரிப்பதற்கு EPFO திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 6 Jun 2022, 2:55 pm
சம்பளம் பெறும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை (PF Accounts) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) நிர்வகித்து வருகிறது. EPFO நிறுவனம் தனது நிதியை முதலீடு செய்து பயனாளிகளுக்கு வருமானமாக கொடுக்கிறது.
Samayam Tamil EPFO


EPFO பங்குகள், பத்திரங்கள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து வருகிறது. தற்போது EPFO தனது மொத்த நிதியில் 15% தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறது. பங்குச் சந்தை முதலீடு என்றால் நேரடியாக பங்குகளில் அல்லாமல் ETF நிதிகளில் முதலீடு செய்கிறது EPFO.

இந்நிலையில், EPFO நிறுவனத்துக்கு கடன் பத்திரங்கள் வாயிலாக கிடைக்க வேண்டிய வருமான இலக்கை தொட முடியவில்லை. எனவே, வருமானத்தை சரிகட்டுவதற்காக பங்குச் சந்தையில் முதலீட்டை அதிகரிக்கும்படி நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழு முன்மொழிந்துள்ளது.

வேலையை விட்டு போனா 77 லட்சம் ரூபாய்.. ஊழியர்களை அதிரவைத்த நிறுவனம்!
நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழு கூட்டம் இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது, வருமான இலக்கை தொடுவதற்காக பங்குச் சந்தையில் முதலீட்டை 15 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக உயர்த்த முன்மொழியப்பட்டது.

இந்த முன்மொழிதலுக்கு முதலில் EPFO அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் மத்திய நிதியமைச்சகம் மற்றும் தொழிலாளர் அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தற்போது EPFO தனது நிதியில் 15% தொகையை, அதாவது 1800 கோடி முதல் 2000 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் ETFகளில் முதலீடு செய்துள்ளது. பங்குச் சந்தை முதலீட்டு வரம்பு 25% ஆக உயர்த்தப்பட்டால் மாதம் 3000 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் EPFO முதலீடு செய்யும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்