ஆப்நகரம்

PF உறுப்பினர்களுக்கு ஹேப்பி நியூஸ்... ரூ.7 லட்சம் காப்பீடு கிடைக்கும்!

கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு பிஎஃப் உறுப்பினர்களுக்கான காப்பீட்டுத் தொகை 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 May 2021, 5:26 pm
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் வருங்கால வைப்பு நிதி (PF) உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்க EPLO திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பிஎஃப் உறுப்பினர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ரூ.2.5 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு ஆண்டுக்குள்ளே ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கொரோனா காப்பீடு கிடைக்கும். உடல்நலக் குறைபாடு, உயிரிழப்பு, விபத்து போன்ற சம்பவங்களுக்கும் இந்த காப்பீடு கிடைக்கும்.
Samayam Tamil pf


EDLI திட்டத்தில் பிஎஃப் உறுப்பினர்களின் 12 மாத அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றைப் பொறுத்து இந்தக் காப்பீடு வழங்கப்படுகிறது. பிஎஃப் உறுப்பினர் கடைசியாகப் பெற்ற மாத சம்பளத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியின் 35 மடங்குத் தொகை காப்பீடாகக் கிடைக்கும். உதாரணமாக, பிஃப் உறுப்பினர் ஒருவரின் 12 மாத அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 15,000 ரூபாயாக இருந்தால் இந்தத் தொகையின் 35 மடங்கும் கூடுதலாக ரூ.1.75 லட்சமும் கிடைக்கும். அதாவது மொத்தம் ரூ.7 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.

ஒரு ரூபாய் நோட்டுக்கு 45,000 ரூபாய் கிடைக்கும்... பணம் சம்பாதிக்க சூப்பர் வழி!

பிஎஃப் உறுப்பினர் ஒருவேளை இறந்துவிட்டால் அவரது நாமினிக்கு காப்பீடு கிடைக்கும். அந்த நாமினி 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் அவரது உறுப்பினர் இதற்கு விண்ணப்பித்து காப்பீடு பெறலாம். இறப்புச் சான்றிதழ், நாமினிக்கான சான்றிதழ், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை காப்பீட்டு நிறுவனத்திடம் வழங்க வேண்டும். இத்திட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் அதன் உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது அனைத்து உறுப்பினர்களுக்கும் பயனளிக்கும் எனவும் EPFO அமைப்பின் பிராந்திய ஆணையர் ஜெய்குமார் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்