ஆப்நகரம்

EPFO Higher pension : பென்சன் உயர்வு.. வெளியான புதிய உத்தரவு.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

EPFO அதிக பென்சன் விண்ணப்பங்கள் தொடர்பாக EPFO நிறுவனம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 5 Jun 2023, 11:54 am
அதிக EPFO பென்சன் பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை, விண்ணப்பம் பெற்ற தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் ஆய்வு செய்து செயல்படுத்தப்பட வேண்டும் என EPFO நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil epfo issues circular to scrutinize applications for higher pension within 20 days of application receipt
EPFO Higher pension : பென்சன் உயர்வு.. வெளியான புதிய உத்தரவு.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!


​EPFO அதிக பென்சன்​

தகுதியானவர்கள் EPFO அதிக பென்சன் பெற விண்ணப்பிப்பதற்கு வழிவகை செய்யும்படி கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் EPFO நிறுவனமும் அதிக பென்சனுக்கான விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

​தகுதியானவர்கள்​

2014 செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பாக EPFO உறுப்பினராகவும், EPS பயனாளியாகவும் இருந்தவர்கள், தொடர்ந்து பணியில் இருந்துகொண்டு, அதிக பென்சன் பெற விண்ணப்பிக்காமல் போயிருந்தால் அவர்கள் இப்போது அதிக பென்சன் பெற விண்ணப்பிக்கலாம்.

​கடைசி தேதி​

EPFO அதிக பென்சன் பெற விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி மே 3ஆம் தேதியாக இருந்தது. பின்னர் கடைசி தேதியை ஜூன் 26ஆம் தேதிக்கு EPFO நிறுவனம் நீட்டித்தது. எனவே, அதிக பென்சன் பெற விரும்புவோர் ஜூன் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

​புதிய உத்தரவு​

இந்நிலையில், அதிக பென்சன் பெற விண்ணப்பித்தவர்களிடம் இருந்து விண்ணப்பத்தை பெற்ற தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் அந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கூடுதல் விவரங்கள் கேட்கப்பட்டு, தவறுகள் இருப்பின் திருத்தப்பட வேண்டும் என EPFO வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்