ஆப்நகரம்

ரிட்டயர்மெண்டுக்கு பின் சூப்பர் வருமானம்.. இப்படியும் ஒரு பிளான் இருக்கு!

பணி ஓய்வுக்கு பின்னும் நல்ல வருமானம் சம்பாதிக்க உதவும் எக்விட்டி சேமிப்புத் திட்டங்கள்.

Samayam Tamil 14 Dec 2021, 5:58 pm
Samayam Tamil Savings
பணி ஓய்வு பெறும் நபர்கள் சாதாரண சேமிப்புத் திட்டங்களுக்கு பதிலாக எக்விட்டி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எக்விட்டி சேமிப்புத் திட்டங்கள் என்றால் என்ன? பங்குகள், கடன் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் வகை திட்டங்கள்தான் இந்த எக்விட்டி சேமிப்புத் திட்டங்கள் (Equity Savings Schemes).

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போலவே இவற்றுக்கும் தனி மேனேஜர்கள் உண்டு. எனினும், ஒட்டுமொத்த பணத்தில் 30 முதல் 35 விழுக்காடு பங்குகளில் மட்டும் முதலீடு செய்யப்படும். மீதமுள்ள தொகை கடன் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்படும்.

LIC புதிய திட்டம்.. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இத்திட்டங்கள் ரிஸ்க்கையும், லாபத்தையும் சீராக வைக்கின்றன. ஆகவே, பணி ஓய்வு பெறும் நபர்கள் லாபம் சம்பாதிக்க எக்விட்டி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் ரிட்டயர்மெண்ட்டுக்கு பின்பும் டீசண்டான வருமானம் சம்பாதிக்க முடியும்.

எக்விட்டி சேமிப்புத் திட்டங்களில் ஆண்டுக்கு குறைந்தது 6 முதல் 7 விழுக்காடு லாபத்தை எதிர்பார்க்கலாம் என முதலீட்டு வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாமல், இத்திட்டங்களில் எக்விட்டி திட்டத்திற்கான வரிச் சலுகையும் பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்