ஆப்நகரம்

மீன் விற்பனை ஜோர்.. அதிக விலைக்கு விற்பனை!

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலையும் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2022, 6:04 pm
ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு கடல் மீன்கள் அதிகளவில் விற்கப்படுவதால் எப்போதும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
Samayam Tamil fish


தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வந்ததால் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களாக மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது. முன்பு 12 டன் முதல் 15 டன் வரை மட்டுமே வரத்து இருந்த நிலையில் மீன்பிடித் தடை காலங்களில் வெறும் 6 டன் வரை மட்டுமே மீன் வரத்து இருந்தது. குறிப்பாக, கேரளாவில் இருந்து மட்டுமே மீன்கள் விற்பனைக்கு வந்தன.

இந்நிலையில் மீன்பிடி தடை காலம் கடந்த 15ஆம் தேதி முடிவடைந்ததால் தமிழக மீனவர்கள் மீண்டும் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இதன் காரணமாக மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று தடைக்காலம் முடிந்தவுடன் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

சமயம் தமிழ் செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்!

இன்று 12 டன் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மீன்கள் விலையும் அதிகரித்துள்ளது. வஞ்சரம் மீன் ஒரு கிலோ போன வாரம் வரை ரூ.850 முதல் ரூ.900 வரை இருந்தது. இந்த வாரம் ரூ.300 அதிகரித்து ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,200க்கு விற்பனையானது. இதேபோல, கிளி - ரூ.500, வவ்வால் - ரூ.700, விளா- ரூ.350, மஞ்சள் சாரை - ரூ.500, சீலா - ரூ.250, அயிலை - ரூ.300, சங்கரா - ரூ.400, மத்தி - ரூ.200, கொடுவா - ரூ.350, இறால் - ரூ.600, நண்டு - ரூ.400 என்ற அளவில் விற்பனையாகின.

அடுத்த செய்தி

டிரெண்டிங்