ஆப்நகரம்

ET MONEY முதலீட்டு அறிக்கை2020 இந்திய முதலீட்டாளர்களின் வளர்ச்சி மாற்றங்கள்!

இந்த அறிக்கை சில ஆச்சரியமான உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது. வளர்ந்து வரும் வருமானம் அதிக முதலீடாக இருக்கக் கூடாது. ஆனால், முதலீட்டாளர்களின் வயது மற்றும் பாலினத்திலும் வேறுபாடு உள்ளது.

Samayam Tamil 13 Oct 2020, 12:35 pm
லட்சக்கணக்கான இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் திட்டங்களைக் கொண்டு ETMONEY தனது முதல் இந்திய முதலீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 15,000 இடங்களிலிருந்தும் பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.100 கோடி மாதாந்திர SIPன் அடிப்படையில் இந்த அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது. 11 மில்லியன் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை இயக்குவதன் மூலம் கமிஷன் இல்லாத நேரடித் திட்டங்கள் மூலம் பல லட்சம் இந்தியர்களும் மியூச்சுவல் ஃபண்டில் இணைந்துள்ளனர். இந்தியர்களை முதலீடு செய்ய ETMONEY எவ்வாறு உத்வேகப்படுத்தியது என்பதைக் காட்டுகிறது இந்த அறிக்கை.
Samayam Tamil et money



முதலீட்டைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், உத்தரப்பிரதேசம் 2வது இடத்திலும் உள்ளது. முதல் மூன்று இடங்கள் என்பது இந்திய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த அறிக்கை சில ஆச்சரியமான உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது. வளர்ந்து வரும் வருமானம் அதிக முதலீடாக இருக்கக் கூடாது. ஆனால், முதலீட்டாளர்களின் வயது மற்றும் பாலினத்திலும் வேறுபாடு உள்ளது.


முதலீடுகளின் அடிப்படையில் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களிலும், பாட்னா, ஜெய்பூர் மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களிலும் உள்ளன. ETMONEY முயற்சியின் வெற்றி என்னவென்றால் முதலீட்டைப் பற்றி அதிகம் தெரியாத இந்த நகரங்கள் கூட முதல் 10 இடங்களில் இடம்பெறச் செய்துள்ளன. ETMONEY ஒவ்வொரு இந்தியருக்கும் தனக்கான சொந்த முதலீட்டு விருப்பங்களை வழங்கியுள்ளது.


ETMONEYன் எளிமையான முதலீட்டு அணுகுமுறை, இளைஞர்களை அவர்களின் நிதிகளை அவர்களே நிர்வகிக்க வாய்ப்பு அளிக்கிறது. ETMONEYன் முதலீட்டு அறிக்கையின் படி, 36வயதுக்கும் குறைவான முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. எனவே, இளைஞர்கள் அதிகளவில் செலவழிக்கிறார்கள் மற்றும் சேமிக்கவில்லை என்ற கருத்துக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது.

இந்த அறிக்கையின் நேர்மையான மற்றும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் #RisingWomenPower. வேலை செய்யும் பெண்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. சொந்த உழைப்பில் இயங்கும் பெண்கள் தங்கள் முதலீடுகள் மற்றும் நீண்ட கால நிதி நிர்வாகத்திற்காக ETMONEYஐ பெரிதும் நம்புகிறார்கள்.


இந்த அறிக்கையின் மூலம் ஒரு முக்கியமான விஷயம் வெளிப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வருமானம் எல்லாமும் முதலீடாக மாறவில்லை. ஆகவே, மக்கள் சம்பாதிக்கவும், சம்பாதித்த பணத்தைச் செலவிட்டு வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவும் தொடங்கிவிட்டார்கள்.

முதலீட்டின் முக்கியத்துவத்தை இந்த ETMONEY india investment Report 2020 எடுத்துக்காட்டுகிறது. முதல் 25 சதவீத முதலீட்டாளர்களின் ELSS நிதியைக் கீழ்நிலை 25 சதவீத முதலீட்டாளர்களுடன் ஒப்பிடுகையில், அவர்களின் பிரிவு மிகவும் பிரிவு மிகவும் தெளிவாக இருந்தது. ELSS ஃபண்ட்ஸ் 3 ஆண்டு நிரந்தர வைப்பு கால முதலீட்டிற்கும், வருமானத்திற்கும் போதுமான நேரம் இருப்பதை உறுதி செய்கிறது.


இந்த அறிக்கை வெளியீட்டின்போது பேசிய ETMONEYன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகேஷ் கல்ரா, ETMONEY தொழில்நுட்ப உதவியுடன் நிதி மேலாண்மை என்பது மில்லியன் இந்தியர்களுக்கு அவர்களின் நிதிகளை நிர்வகிப்பதை எளிதாக்கியுள்ளது என்பதை இந்தியா முதலீட்டு அறிக்கை 2020 காட்டுகிறது. இந்த சாதனையைப் பயனர்களின் நம்பிக்கை மற்றும் அன்பு மட்டுமே காரணம். மேலும், தொழில்நுட்ப உதவியுடன் இந்திய முதலீட்டாளர்களின் எதிர்ப்பார்ப்புகையும் பூர்த்தி செய்ய எங்கள் குழு தயாராக உள்ளது.

ETMONEY இன் இந்தியா முதலீட்டு அறிக்கை 2020 முழுமையான நகலைப் பெற இங்கே கிளிக் செய்யவும். ETMONEY Investment Report 2020

அடுத்த செய்தி

டிரெண்டிங்