ஆப்நகரம்

Gold Price: கேப் விடாமல் அடிக்கும் தங்கம்!

காலையில் தங்கம் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மாலையில் மேலும் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 14 Dec 2021, 5:06 pm
தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இதனால் நகை வாங்குவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இன்று காலையில்தான் விலை உயர்த்தப்பட்டது. அந்த சோகம் மறைவதற்குள் மாலையில் மேலும் உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. தற்போது தங்கம் விலை எவ்வளவு என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil gold price


சென்னையில் இன்று (டிசம்பர் 14) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,538 ஆக இருந்தது. மாலையில் அது 4,542 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, இன்று காலை 36,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 32 ரூபாய் உயர்ந்து 36,336 ரூபாய்க்கு வந்துள்ளது.

Gold Rate: தங்கம் விலை உயர்வு: சென்னை மக்கள் அதிர்ச்சி!

தூய தங்கத்தின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை 4,904 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,908 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல, காலையில் 39,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 32 ரூபாய் உயர்ந்து 39,264 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.65.20 ஆக இருந்தது. மாலையிலும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 65,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்