ஆப்நகரம்

நாட்டின் ஏற்றுமதி சரிவு

மார்ச் மாத முடிவில், நாட்டின் ஏற்றுமதி 5.5% ஆக சரிவடைந்துள்ளதாகவும், தொடர்ந்து, 16 மாதங்களாக ஏற்றுமதி சரிவில் நீடிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TOI Contributor 19 Apr 2016, 2:49 pm
மார்ச் மாத முடிவில், நாட்டின் ஏற்றுமதி 5.5% சரிவடைந்துள்ளதாகவும், தொடர்ந்து, 16 மாதங்களாக ஏற்றுமதி சரிவில் நீடிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil exports slip for 16th straight month
நாட்டின் ஏற்றுமதி சரிவு


மார்ச் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி ரூ.1,49,820 கோடியாக உள்ளது. அதேசமயம், இறக்குமதி 22% உயர்வடைந்து, ரூ.1,83,480 கோடியாகவும் உள்ளது. இதையடுத்து, ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை ரூ.33,660 கோடியாகக் குறைந்தும் உள்ளது.

சர்வதேச அளவில் நீடிக்கும் பொருளாதார மந்தநிலை காரணமாக, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. அதேசமயம், அந்நாடுகளின் இறக்குமதி அதிகரித்துக் காணப்படுகிறது. இதே நிலையே, இந்தியாவிலும் நீடிப்பதாக, மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்