ஆப்நகரம்

வெளிநாட்டு காரங்க பானி பூரி சாப்பிடும் காலம்.. அமைச்சர் ஜெய்சங்கர் கலகல பதில்!

வெளிநாட்டவர்கள் பர்கருக்கு பதிலாக பானி பூரி சாப்பிடுவார்களா என்ற கேள்விக்கு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 17 May 2023, 4:22 pm
இந்திய கலாச்சாரம் உலகமயமாகி வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil எஸ்.ஜெய்சங்கர்
எஸ்.ஜெய்சங்கர்



வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு பயணமாக சுவீடன் நாட்டுக்கு சென்றிருந்தார். அங்கு ஸ்டாக்ஹோம் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சுவீடன் வாழ் இந்தியர்களிடம் கலந்துரையாடினார். கலகலப்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கரிடம் இந்தியர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அப்போது, உலகமயமான இந்த காலகட்டத்தில் மேற்கு நாடுகள் பர்கருக்கு பதிலாக பானி பூரி சாப்பிடுவார்களா எனவும், H&M டி-சர்ட்டுகளில் நியூ யார்க் பதிலாக நியூ டெல்லி என எழுத்துகள் பதிக்கப்படுமா எனவும் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்திய கலாச்சாரம் உலகமயமாகி வருவதை நான் பார்த்து வருகிறேன். பல்வேறு காரணங்களுக்காக இந்திய கலாச்சாரம் உலகமயமாகி வருகிறது. முதல் காரணம், இந்தியர்கள் உலகெங்கும் பரவி வாழ்வதுதான்.

இரண்டாவது காரணம், நாம் நம்பிக்கையுடன் நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதுதான். நமது கலாச்சாரத்தை இன்னும் உலகெங்கும் கொண்டு செல்வதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் சர்வதேச யோகா தினம்.

2015ஆம் ஆண்டில் சர்வதேச யோகா தினத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைத்தார். அமெரிக்காவிலும் சர்வதேச யோகா தினத்தை பற்றி அவர் பேசினார். ஆனால் இந்த அளவுக்கு உலகெங்கும் யோகா பிரபலம் அடையும் என நாம் யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை. இப்போது உலகத்தில் யோகா மீதான ஆர்வம் இல்லாத ஒரு நாடே இல்லை.

இதுபோக இசை, சினிமா போன்றவையும் இருக்கின்றன. அதுதான் கலாச்சாரத்தின் சக்தி. அது இந்தியாவின் பலம் என கருதுகிறேன். நீங்களும் ஆர்வம் செலுத்தினால் மற்றவர்களும் உங்களுடன் சேர்ந்துகொள்வார்கள்” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்