ஆப்நகரம்

டிஜிட்டல் வர்த்தகத்தை குறிவைக்கும் ஃபேஸ்புக்!

சர்வதேச அளவில் டிஜிட்டல் வர்த்தகத்திற்குள் நுழைவதற்கான முயற்சிகளை ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Samayam Tamil 21 May 2020, 1:46 pm
கொரோனா கொள்ளை நோயால் உலகமே முடங்கி கிடக்கும் இந்தச் சூழலில், டிஜிட்டல் வர்த்தகத்திற்குள் நுழைய ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்திற்கு ‘ஃபேஸ்புக் ஷாப்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, வர்த்தகர்கள் ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டகிராமிலும் தொழிலை அமைத்து அவர்களது பொருட்களை விற்பனை செய்ய முடியும். விற்பனைக்கான பணப் பரிவர்த்தனையை ஃபேஸ்புக் மூலமாகவோ, மற்ற கட்டணத் தளங்கள் மூலமாகவோ மேற்கொள்ளலாம்.
Samayam Tamil Facebook shop


இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் ஜக்கர்பர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ஃபேஸ்புக் ஷாப்ஸ் திட்டத்தின் அடிப்படை நோக்கமே, சிறு தொழில்கள் தங்களது பொருட்களை நேரடியாக பல்வேறு ஆப்களின் மூலம் விற்பனை செய்ய முடியும். ஃபேஸ்புக்கில் நீங்கள் ஒருவரின் கடையை பார்த்தால் அவரது தொழில் வராலாற்றையும், அவர் விற்பனை செய்யும் பொருட்களையும் பார்க்க முடியும். அவர்களிடமிருந்து நீங்கள் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டம் முதற்கட்டமாக ஃபேஸ்புக் மெசெஞ்சர் மற்றும் வாட்சப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ‘ஜியோமார்ட்’ என்ற வர்த்தகத் தளத்தை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜியோமார்ட் மூலம் டிஜிட்டல் முறையில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இது இந்தியாவுக்கு மட்டுமான திட்டம் என்றாலும், உலகளவில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கு நுழைய ஃபேஸ்புக் ஷாப்ஸ் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் ஒருபுறம் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும், மறுபுறம் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக பெருநிறுவனங்களும் சிறு வர்த்தகர்கள், மளிகைக் கடைகள், கிரானா கடைகளுடன் கூட்டணி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்